மக்கள் மனதை மாற்றவே சென்னையில் கூட்டம்: மத்திய அமைச்சர்

புதுடில்லி: முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக மக்கள் உள்ளதால், அதனை மாற்ற வேண்டும் என்பதற்காக பா.ஜ.,வை விமர்சித்து தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் சென்னையில் கூட்டம் நடத்தப்பட்டது என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.
ஐதராபாத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலினும் சில கட்சிகளும் இன்று ஒரு கூட்டத்தை கூட்டி உள்ளனர். காங்கிரஸ், திமுக, பிஆர்எஸ் கட்சிகளிடம் நான் ஒன்று கேட்க விரும்புவது, லோக்சபா தொகுதி எம்.பி., மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எங்காவது ஆலோசனை நடத்தியதா?
கடந்த 4.5 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வரும் முதல்வர் ஸ்டாலின் ஊழலில் மூழ்கி உள்ளார். வரும் தேர்தலில், அவருக்கு எதிராக மக்கள் உள்ளனர். இதனை மாற்றுவதற்காக தொகுதி மறுசீரமைப்பு குறித்து என்ற பெயரில் பா.ஜ.,வை விமர்சித்து கூட்டம் நடத்துகிறார்.
எல்லை நிர்ணயம், தாய்மொழி அல்லது உள்ளூர் மொழி பிரச்னையா என மக்களிடம் கேட்க விரும்புகிறேன். பா.ஜ. அனைத்து மாநிலங்களுக்கும் நீதி வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.