ராக் பொறியியல் கல்லுாரியில் பேச்சு போட்டி பரிசளிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி என்.எஸ்.எஸ்., நேரு யுவகேந்திரா, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் தேசிய இளைஞர் நாடாளுமன்றம் தலைப்பில் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி நடந்தது.

ராக் பொறியியல் கல்லுாரியில் நடந்த போட்டியில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 150 கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். போலீஸ் எஸ்.பி., மாறன், கல்லுாரி முதல்வர் ரவிச்சந்திரன் ஆகியோர் தேசிய இளைஞர் நாடாளுமன்றம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

நேரு யுவகேந்திரா பொறுப்பாளர் தெய்வசிகாமணி, என்.எஸ்.எஸ்., பொறுப்பாளர் சதீஷ்குமார், ராக் பொறியியல் கல்லுாரி பேராசிரியர்கள் சோமசுந்தரம், சவரிராசன், ராமச்சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.

Advertisement