'டிரிபிள் ஜம்ப்': பிரவீன் சித்ரவேல் 'வெள்ளி'

பெங்களூரு: 'இந்திய ஓபன் ஜம்ப்ஸ்' போட்டியில் தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல் ('டிரிபிள் ஜம்ப்') வெள்ளி வென்றார்.

பெங்களூருவில், 'இந்திய ஓபன் ஜம்ப்ஸ்' 4வது சீசன் நடந்தது. ஆண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' பைனலில், 17.13 மீ., தாண்டிய தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். 'இந்தியன் ஏர் போர்ஸ்' அணியின் அப்துல்லா அபூபக்கர், அதிகபட்சமாக 17.19 மீ., தாண்டி தங்கம் வென்றார். தவிர இருவரும், ஆசிய தடகள சாம்பியன்ஷிப் (மே 27-31, தென் கொரியா) போட்டிக்கு தகுதி பெற்றனர். இதற்கான தகுதி இலக்காக 16.59 மீ., நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவின் அசோக் யாதவ் (15.94 மீ.,) வெண்கலம் கைப்பற்றினார். மற்ற தமிழக வீரர்களான நவீன் (15.30 மீ.,), புவனேஷ் (15.12 மீ.,) முறையே 4, 7வது இடம் பிடித்தனர்.


ஆண்களுக்கான 'போல் வால்ட்' பைனலில் தமிழகத்தின் கோகுல் நாத் (4.90 மீ.,), கவுதம் (4.80 மீ.,) முறையே தங்கம், வெள்ளி வென்றனர்.

Advertisement