ஜிம்னாஸ்டிக்ஸ்: பிரனதி 'வெண்கலம்'

அன்டால்யா: ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பை 'வால்ட்' பிரிவில் இந்திய வீராங்கனை பிரனதி வெண்கலம் வென்றார்.

துருக்கியில், 'ஆர்டிஸ்டிக்' ஜிம்னாஸ்டிக்ஸ் 'அப்பாரடஸ்' உலக கோப்பை தொடர் நடந்தது. இதில் பெண்களுக்கான 'வால்ட்' பிரிவு தகுதிச் சுற்றில் (13.317 புள்ளி) 3வது இடம் பிடித்த இந்தியாவின் பிரனதி நாயக் 29, பைனலுக்குள் நுழைந்தார்.

பைனலில் அசத்திய பிரனதி, 13.417 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, உலக கோப்பையில் பிரனதி கைப்பற்றிய 2வது வெண்கலம். ஏற்கனவே கடந்த ஆண்டு எகிப்தில் நடந்த உலக கோப்பை 'வால்ட்' பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார்.
அமெரிக்காவின் ஜெய்லா ஹேங் (13.667 புள்ளி), கிளேர் பீஸ் (13.567) முறையே தங்கம், வெள்ளி வென்றனர்.

Advertisement