வெங்காயம் ஏற்றுமதி மீதான 20 சதவீதம் வரி ரத்து: மத்திய அரசு உத்தரவு

புதுடில்லி: வெங்காய ஏற்றுமதி மீதான 20 சதவீத வரியை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. இது வரும் ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய நுகர்வோர் விவகாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தாண்டு ராபி பருவத்தில் நாட்டில் வெங்காயம் உற்பத்தி 2 கோடியே 27 லட்சம் டன் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் 18 சதவீதம் அதிகம்.
இதனால் நாசிக் வெங்காய சந்தையில் விலை 30 முதல் 40 சதவீதம் சரிந்துள்ளது.

இந்த விலை சரிவால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி வெங்காய ஏற்றுமதி மீதான வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
தற்போது வெங்காயத்தின் மீதான ஏற்றுமதி வரி 20 சதவீதமாக உள்ளது. இந்த வரியை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பு ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு, விலை வீழ்ச்சியால் கவலையில் இருந்த வெங்காய விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement