இந்தியா வருகிறது வெ.இண்டீஸ் * டெஸ்ட் தொடரில் பங்கேற்க...

கோல்கட்டா: இந்திய மண்ணில் 12 ஆண்டுக்குப் பின் டெஸ்ட் தொடரில் பங்கேற்க வருகிறது வெஸ்ட் இண்டீஸ்.
வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக 2013-14ல் இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இத்துடன் ஜாம்பவான் சச்சின், சர்வதேச அரங்கில் இருந்து விடைபெற்றார். பின் 2022ல் இந்தியா வந்த வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள், 'டி-20' தொடரில் பங்கேற்றது.
தற்போது இந்தியா வரவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 12 ஆண்டுக்குப் பின் இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. மொஹாலி (அக். 2-6), கோல்கட்டாவில் (அக். 10-14) போட்டி நடக்கவுள்ளன.
இதன் பின் தென் ஆப்ரிக்க அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் (டில்லி, கவுகாத்தி) தொடரில் பங்கேற்க, இந்தியா வருகிறது. பின் மூன்று ஒருநாள் (நவ. 30ல் ராஞ்சி, டிச. 3ல் ராய்ப்பூர், டிச. 6ல் விசாகப்பட்டனம்), ஐந்து 'டி-20' (டிச. 9, 11, 14, 17, 19) போட்டி கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
மேலும்
-
அரசு பள்ளிகளை பிஎம்ஸ்ரீ பள்ளிகளாக மாற்றுவோம்: அண்ணாமலை
-
கிணத்துக்கடவு -- திருப்பூருக்கு மீண்டும் பஸ் இயக்க கோரிக்கை
-
இத்தாலி கார் ரேஸில் அஜித் அணி வெற்றி; மீண்டும் தேசியக் கொடியை ஏந்திய அஜித்
-
ரயில்வே மேம்பாலம் அமைக்க முடியுமா? அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ., ஆய்வு
-
பள்ளிகளில் ஆண்டு விழா; கோலாகலமாக கொண்டாட்டம்
-
'உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும்' ரயில்வே உபயோகிப்பாளர் குழு வலியுறுத்தல்