செபக்தக்ரா: பைனலில் இந்தியா

பாட்னா: உலக கோப்பை செபக்தக்ரா பைனலுக்கு இந்திய பெண்கள் அணி முன்னேறியது.
பீஹாரில் உலக கோப்பை செபக்தக்ரா போட்டி நடக்கிறது. பெண்கள் இரட்டையர் முதல் போட்டியில் இந்திய அணி 2-0 என சீனாவை வென்றது. அடுத்து பிரான்ஸ், ஜப்பானை சாய்த்தது.
லீக் சுற்றில் பங்கேற்ற 3 போட்டியிலும் வெற்றி பெற்ற இந்தியா, அரையிறுதிக்கு முன்னேறியது.
இதில் இந்தியா, ஈரான் மோதின. முதல் செட்டை 15-5 என வென்ற இந்தியா, அடுத்த செட்டையும் 15-5 என எளிதாக வசப்படுத்தியது. முடிவில் இந்திய அணி 2-0 என வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.
ஆண்கள் அபாரம்
ஆண்கள் இரட்டையர் முதல் போட்டியில் இந்தியா, 2-0 என போலந்தை வென்றது. அடுத்து மலேசியாவிடம் 0-2 என தோற்றது. மூன்றாவது போட்டியில் சீன தைபேவை 2-0 என வென்று, காலிறுதிக்கு முன்னேறியது. இதில் இந்திய அணி 2-1 என (10-15, 15-10, 15-7) வியட்நாமை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.
மேலும்
-
நகரில் பராமரிப்பில்லாத பூங்காக்கள்; நகராட்சி கண்டுகொள்ளாமல் அவலம்
-
அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும்: மணிப்பூரில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி உறுதி
-
அமராவதி அணை துார்வாரும் திட்டம் தமிழக அரசு நிதி ஒதுக்குமா?
-
அரசு பள்ளிகளை பிஎம்ஸ்ரீ பள்ளிகளாக மாற்றுவோம்: அண்ணாமலை
-
கிணத்துக்கடவு -- திருப்பூருக்கு மீண்டும் பஸ் இயக்க கோரிக்கை
-
இத்தாலி கார் ரேஸில் அஜித் அணி வெற்றி; மீண்டும் தேசியக் கொடியை ஏந்திய அஜித்