'முதல்வரின் காக்கும் கரங்கள்' திட்டத்தின்கீழ் முன்னாள் படைவீரர்களுக்கு கடனுதவி

காஞ்சிபுரம், முதல்வரின் காக்கும் கரங்கள்' என்ற திட்டம் வாயிலாக முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை கடனுதவி பெற வழிவகை செய்யப்படும். அதிகபட்ச கடனுதவியாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்.

முன்னாள் படைவீரர்கள், படைவீரரை இழந்த மனைவி, முன்னாள் படைவீரரின் மனைவி, முன்னாள் படைவீரரின் திருமணமாகாத மகள், 25 வயதிற்கும் குறைவான முன்னாள் படைவீரரின் மகன் உள்ளிட்டோர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் வாயிலாக உற்பத்தி மற்றும் சேவை பிரிவில் விவசாயத்துடன் நேரடியாக தொடர்புடைய எந்தவொரு செயலும் தொடங்கலாம் எனவும் பட்டுப்புழு வளர்ப்பு, கால்நடை பிரிவினைச் சார்ந்த மீன் வளர்ப்பு, பன்றி வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பு ஆகிய தொழில்களை தொடங்கலாம் என, ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

மேலும், விபரங்களுக்கு தாம்பரத்தில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை 044 - 22262023 தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement