வஞ்சுவாஞ்சேரி ஏரியில் குவியும் சிமென்ட் கலவை கழிவு தனியார் வீட்டுமனை விற்பனை நிறுவனம் அடாவடி

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் ஊராட்சிக்குட்பட்ட, வஞ்சுவாஞ்சேரி கிராமத்தில், பொதுப்பணித் துறை கட்டுபாட்டின்கீழ் ஏரி அமைந்துள்ளது. வண்டலுார் -- வாஜாலாபாத் சாலையோரம் உள்ள இந்த ஏரி, அப்பகுதி மக்களின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
தற்போது, இந்த ஏரிக்கு அருகே, தனியார் வீட்டுமனை விற்பனை நிறுவனம், வீட்டுமனைகளை அமைத்து விற்பனைக்கான பணியினை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, சாலை மற்றும் ஆர்ச் அமைக்க லாரியில் கொண்டு வரப்படும் சிமென்ட் கலவையின் கழிவை ஏரியில் கொட்டுகின்றனர்.
ஏரியின் ஒரு பகுதி முழுதும் சிமென்ட் கலவைகளால் நிரம்பியுள்ளது. இதனால், முற்றிலும் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது. கோடை காலம் எதிர்வரும் நிலையில், ஏரியில் உள்ள தண்ணீர் வெகு விரைவாக குறைந்து வரும் நிலையில், தனியார் வீட்டுமனை விற்பனை நிறுவனத்தின் இது போன்ற அத்துமீறல்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:
நீர் நிலைகளில் இது போன்ற அத்துமீறல்களால், எதிர்வரும் காலத்தில் ஏரியில் தண்ணீர் சேகரிக்க முடியாத நிலை ஏற்படும். நிலத்தடி நீர் தட்டுபாடு ஏற்படுவதுடன், கோடைக் காலங்களில் தண்ணீர் இல்லாமல் கால்நடைகள் வெகுமாக பாதிப்பு அடையும்.
மேலும், ஏரியில் ஆக்கிரமிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம், நீர்நிலைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
கோல்கட்டா அணி முதல் வெற்றி: குயின்டன் அரைசதம் விளாசல்
-
பிரேசிலை வென்றது அர்ஜென்டினா * உலக கோப்பை தொடருக்கு தகுதி
-
இந்திய கால்பந்தின் எதிர்காலம்... * பயிற்சியாளர் மார்குயஸ் ஏமாற்றம்
-
கவலைப்படாதே ஷஷாங்க் * என்ன சொன்னார் ஷ்ரேயாஸ்
-
வெண்கலம் வென்றார் சுனில் குமார் * ஆசிய மல்யுத்தத்தில்...
-
ஸ்குவாஷ்: அரையிறுதியில் ஜோஷ்னா