அடகு வைத்த நகை மாறியதாக புகார்

துாத்துக்குடி : வங்கியில் அடகு வைத்த நகைகள் மாறிவிட்டதாக விவசாயி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கட்டாரங்குளத்தைச் சேர்ந்தவர் சர்க்கரைசாமி, 57; விவசாயி.
இவர், தொழில் தேவைக்காக இனாம்மணியாச்சி கிராமத்தில் செயல்பட்டு வரும் யூனியன் பேங் ஆப் இந்தியா வங்கியில், கடந்த ஆண்டு மூன்று பிரிவுகளாக, 19 சவரன் நகைகளை அடகு வைத்து, 8 லட்சத்து 49,000 ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
ஓராண்டு கடந்து விட்டதால், வட்டி தொகையை மட்டும் செலுத்தி, நகையை திருப்பி அடகு வைப்பதற்காக சர்க்கரைசாமி கடந்த 18ம் தேதி வங்கிக்கு சென்றார்.
படிவங்களில் கையெழுத்திட்ட பின் அவரது நகைகளை சரிபார்த்தபோது, தரம் சற்று குறைவாக இருப்பதாக வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், அந்த நகைகளை பார்த்த சர்க்கரைசாமி, அவை தான் அடகு வைத்த நகைகள் இல்லை என கூறிவிட்டு, வங்கியில் இருந்து வெளியேறினார்.
இது தொடர்பாக, கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் சர்க்கரைசாமி புகார் அளித்துள்ளார். வங்கி நிர்வாகம் தரப்பிலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் இ.பி.எஸ்., சந்திப்பு
-
பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் காலமானார்
-
சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது: அண்ணாமலை கேள்வி
-
புறநகருக்கு மாறும் திஹார் ஜெயில்: டில்லி பட்ஜெட்டில் அறிவிப்பு
-
பிரிமியர் லீக்: ஸ்ரேயாஸ் அரைசதம்: பஞ்சாப் அணி 15 ஓவரில் 156 /4 ரன்
-
சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: பின்னணியில் செல்வப்பெருந்தகை