கிடப்பில் அங்கன்வாடி மையம் கட்டுமானப் பணி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில், அப்பாராவ் பூங்கா வளாகத்தில், 1986ல் சிமென்ட் ஷீட் வேயப்பட்ட கூரையில் அங்கன்வாடி மையம் துவக்கப்பட்டது. இங்கு 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வந்தனர். இந்நிலையில், 2017ம் ஆண்டு பலத்த பெய்த மழையின்போது, அங்கன்வாடி மையத்தின் சிமென்ட் ஷீட் கூரை சேதமடைந்தது.
இதனால், புதிய அங்கன்வாடி மையம் கட்டுமானப் பணியை துவக்குவதற்காக, குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அங்கன்வாடி மையம் ஒற்றைவாடை தெருவில் வாடகை கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
இதையடுத்து, மேற்கு ராஜ வீதியில் இயங்கிய பழைய அங்கன்வாடி மைய கட்டடத்தில் சிமென்ட் ஷீட் கூரை மட்டும் அகற்றப்பட்டது. ஆனால், புதிய கட்டடம் கட்டுவதற்கான அடுத்தகட்ட பணியை மாநகராட்சி நிர்வாகம், எட்டு ஆண்டுகளாக துவக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
இதனால், அங்கன்வாடி மையம் இயங்கிய கட்டடம் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. மையத்திற்குள் சாலை தடுப்புகள் போடப்பட்டும், சிறுநீர் கழிக்கும் இடமாகவும், இரவு நேரத்தில் சமூக விரோத செயல் அரங்கேறும் இடமாக மாறியுள்ளது.
எட்டு ஆண்டுகளாக அப்பாராவ் பூங்காவில், புதிய அங்கன்வாடி மையத்திற்கான கட்டுமானப் பணியை மாநகராட்சி நிர்வாகம் துவக்காததால், போதுமான இடவசதி, காற்றோட்டம் இல்லாத வாடகை கட்டடத்தில் பயிலும், அங்கன்வாடி குழந்தைகள் ஓடி, ஆடி விளையாடி கல்வி கற்க இயலாத சூழல் உள்ளது.
எனவே, குழந்தைகளின் நலன் கருதி, மேற்கு ராஜ வீதி, அப்பாராவ் பூங்காவில், பழைய அங்கன்வாடி மைய கட்டடத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்ட வேண்டும் என, அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும்
-
டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் இ.பி.எஸ்., சந்திப்பு
-
இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் காலமானார்
-
சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது: அண்ணாமலை கேள்வி
-
புறநகருக்கு மாறும் திஹார் ஜெயில்: டில்லி பட்ஜெட்டில் அறிவிப்பு
-
பிரிமியர் லீக்: ஸ்ரேயாஸ் அரைசதம்: பஞ்சாப் அணி 15 ஓவரில் 156 /4 ரன்
-
சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: பின்னணியில் செல்வப்பெருந்தகை