திருப்போரூர் கோவிலில் விடையாற்றி உற்சவம்

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், நேற்று எட்டாம் நாள் விடையாற்றி உற்சவத்தில், கந்தபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோற்சவ பெருவிழா, கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, 15ம் தேதி திருக்கல்யாண வைபவத்துடன் நிறைவடைந்தது.
இதில், முக்கிய விழாவாக, 9ம் தேதி தேர் திருவிழாவும், 12ம் தேதி தெப்ப திருவிழாவும், 15ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்து முடிந்தது.
திருக்கல்யாணம் உற்சவம் நிறைவடைந்த அன்றிலிருந்து 13 நாட்களுக்கு, விடையாற்றி உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், 8ம் நாள் உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், பகல் 11:00 மணிக்கு உற்சவர் கந்தசுவாமி பெருமானுக்கு மஹா அபிஷேகமும், தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு மஹா தீபாராதனையும், அர்ச்சனையும் நடந்தது.
விழாவில், கந்தபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கந்தபெருமானை வழிபட்டனர்.
மேலும்
-
டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் இ.பி.எஸ்., சந்திப்பு
-
பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் காலமானார்
-
சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது: அண்ணாமலை கேள்வி
-
புறநகருக்கு மாறும் திஹார் ஜெயில்: டில்லி பட்ஜெட்டில் அறிவிப்பு
-
பிரிமியர் லீக்: டாஸ் வென்ற குஜராத் அணி 'பீல்டிங்'
-
சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: பின்னணியில் செல்வப்பெருந்தகை