சிறுமியிடம் அத்துமீறிய வாலிபருக்கு 'காப்பு'

கொளத்துார், கொளத்துாரைச் சேர்ந்த 42வது பெண்ணின் 11, 8 வயதுடைய இரு மகள்கள், சென்ட்ரல் அருகே உள்ள பள்ளியில் பயில்கின்றனர்.

கடந்த 12ம் தேதி, பள்ளியில் இருந்து இரு மகள்களையும் தாய் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

வீட்டருகே, ஸ்கூட்டரில் வந்த தலைகவசம் அணிந்திருந்த வாலிபர், இளைய மகளின் வாயை பொத்தி, தகாத முறையில் நடந்து கொண்டார். சிறுமியின் தாய் கூச்சலிடவே, அந்த வாலிபர் அங்கிருந்து தப்பினார்.

சிறுமியின் தாய், கொளத்துாரில் அளித்த புகாரின்படி, வாலிபரின் 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டர் பதிவு எண்ணை வைத்து, போலீசார் தேடினர்.

இந்நிலையில் அந்த வாலிபர் பெரம்பூர், வாசுதேவன் தெரு பகுதியைச் சேர்ந்த முகமது அலீம், 45, என்பது தெரியவந்தது. அவரை, போலீசார் நேற்று கைது செய்து, ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர்.

இவர், புழல் பகுதியில் தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டது சம்பந்தமாக, புழல் காவல்நிலையத்தில் ஏற்கனவே வழக்கு பதிவாகியுள்ளது.

Advertisement