4 சிறப்பு ரயில்கள் மே வரை நீட்டிப்பு
சென்னை,
கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு, சென்னை பெரம்பூர் வழியாக செல்லும் நான்கு சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:
★ பீஹார் மாநிலம் தானாபூரில் இருந்து ஞாயிறு, திங்கள்கிழமைகளில் புறப்பட்டு, பெரம்பூர் வழியாக எஸ்.எம்.வி.டி., பெங்களூரு செல்லும் வாரந்திர சிறப்பு ரயில், இன்று முதல் மே 26 தேதி வரை நீட்டிக்கப்படுகிறது
★ எஸ்.எம்.வி.டி., பெங்களூரில் இருந்து செவ்வாய், புதன்கிழமைகளில் புறப்பட்டு பெரம்பூர் வழியாக தானாபூருக்கு செல்லும் வாரந்திர ரயில், வரும் 24ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும்
★ தானாபூரில் இருந்து செவ்வாய்கிழமைகளில் புறப்பட்டு, எஸ்.எம்.வி.டி., பெங்களூரு செல்லும் சிறப்பு ரயில், வரும் 25ம் தேதி முதல் மே 27ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும்
★ பெங்களூரில் இருந்து வியாழக்கிழமைகளில் புறப்பட்டு, தானாபூர் செல்லும் சிறப்பு ரயில், வரும் 27ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.