வரகூர் பகுதிகளில்சூரியகாந்தி சாகுபடி


வரகூர் பகுதிகளில்சூரியகாந்தி சாகுபடி


கிருஷ்ணராயபுரம்:வரகூர் சுற்று வட்டார பகுதியில், சூரியகாந்தி சாகுபடி பணி நடந்து வருகிறது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த வரகூர், குழந்தைப்பட்டி, மேட்டுப்பட்டி, சரவணபுரம், பாம்பன்பட்டி, நடுப்பட்டி ஆகிய பகுதிகளில், விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடி செய்துள்ளனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
தற்போது செடிகள் பசுமையாக வளர்ந்து பூக்கள் பூத்து வருகிறது. சில வாரங்களில் பூக்களில் விதைகள் வந்ததும், அறுவடை செய்த பின், உலர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படும். சூரியகாந்தி சாகுபடிக்கு குறைந்தளவு தண்ணீரே போதுமானது.

Advertisement