நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மானியம்
சென்னை: 'அரசு மானியத்தில், கால்நடை பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்' என, கால்நடை பராமரிப்புத்துறை அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில், புதிய கால்நடை பண்ணைகள் அமைக்க, அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. அதன்படி, நாட்டுக்கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க, 25 லட்சம் ரூபாய் வரையும், செம்மறி ஆடு, வெள்ளாடு பண்ணை அமைக்க, 10 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரையும் மானியம் வழங்கப்படுகிறது.
பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க 15 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை, வைக்கோல், ஊறுகாய்புல், மொத்த கலப்பு உணவு, தீவன தொகுதி மற்றும் தீவன சேமிப்பு வசதிகள் பண்ணை அமைக்கவும், தொழில் முனைவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில், தனிநபர், சுயஉதவி குழுக்கள், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு, விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கங்கள், https://nlm.udyamitra.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை, http://www.tnlda.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையின் நடுவில் மின் கம்பம்
-
பல்லவ உத்சவத்தில் காஞ்சி வரதர்
-
ஊதாரியாக சுற்றியதை கண்டித்த பெரியப்பாவை அடித்து கொன்ற மகன்
-
சைபர் கிரைம் குற்றம் குறித்து போலீசார் விழிப்புணர்வு பேனர்
-
உடல் ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் மதுராந்தகத்தில் கவிழ்ந்து விபத்து
-
கிழக்கு கடற்கரை சாலையில் களைகட்டும் நுங்கு விற்பனை