ஊதாரியாக சுற்றியதை கண்டித்த பெரியப்பாவை அடித்து கொன்ற மகன்

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த ஒரத்தியில் உள்ள எஸ்.எஸ்., தனியார் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் பிரகாஷ்,44, ஜமுனா ராணி, 39, தம்பதி.

ஜமுனா ராணியின் தங்கை மஞ்சுளாவின் கணவர் இறந்த நிலையில், அவரது மகன் சூர்யா, 19, என்பவர், இவர்களுடன் வசித்து வருகிறார்.

சூர்யா எந்த வேலைக்கும் செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றியதால், நேற்று முன்தினம் இரவு, அவரது பெரியப்பாவான பிரகாஷ் கண்டித்துள்ளார். இதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதேபோல், நேற்று இரவும் இருவருக்கும் சண்டை வந்துள்ளது.

அப்போது மது போதையில் இருந்த சூர்யா, தன் பெரியப்பா பிரகாஷை மரக்கட்டை மற்றும் கத்தியால், தலையில் பலமாக தாக்கியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் விழுந்த பிரகாஷை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, அச்சிறுபாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பிரகாஷ் உயிரிழந்து உள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரத்தி போலீசார், பிரகாஷை தாக்கிய கட்டை, கத்தியை கைப்பற்றி, சூர்யா

மீது வழக்கு பதிவு செய்தனர்.

பின், அதே பகுதியில் தலைமறைவாக இருந்த சூர்யாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement