சைபர் கிரைம் குற்றம் குறித்து போலீசார் விழிப்புணர்வு பேனர்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கிரைம் போலீசார் சார்பில், பொதுமக்களுக்கு சைபர் குற்றம் குறித்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் பிரதான சாலை சந்திப்புகளில், சைபர் கிரைம் குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கிரைம் போலீஸ் நிலையம் சார்பில், விழிப்புணர்வு குறித்து ‛பேனர் வைத்துள்ளனர்.

இதில், சைபர் குற்ற புகார்களுக்கு 1930 என்ற எண்ணை அழைக்கவும். தமிழக டி.ஜி.பி.,யின் சைபர் விழிப்புணர்வு பேச்சு, டிஜிட்டல் கைது குறித்து பிரபல சினிமா நடிகர் ஒருவரின் வீடியோ, சைபர் குற்றம் குறித்த வழிகாட்டல் உள்ளிட்டவற்றை இணையதளம் வாயிலாக காண்பதற்கு, ‛க்யூ ஆர்' கோடு பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது.

மேலும், சைபர் கிரைம் புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளம் முகவரியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement