மாற்றி மாற்றி பேசுவதில் அண்ணாமலைக்கு நிகர் அவரே

9

கோவை : ''மாற்றி மாற்றிப் பேசுவதில், அண்ணாமலைக்கு நிகர் அவரே,'' என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.


கோவையில் நேற்று அவர் அளித்த பேட்டி:

கோடைக் காலத்தில் மின்தேவையை சமாளிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேவையை விட கூடுதலாக மின்சாரம் இருக்கிறது. கூடுதலாக தேவைப்பட்டால்

'டெண்டர்' கோரி, உடனுக்குடன் மின்தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

வெப்பம் காரணமாக, எங்காவது ஓரிடத்தில் மின்தடை ஏற்பட்டு இருக்கலாம். மின் பழுது ஏற்பட்டால், சீரமைப்பதற்கு போதிய ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 2030 வரை எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் என்பதை கணக்கெடுத்து, அதற்கான முன்னெடுப்புகளை துவக்கியுள்ளோம்.

மதுவிலக்கு சம்பந்தமாக, 2023, 2024ல் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசிய வீடியோ இருக்கிறது. 2023ல் பேசியபோது, 'மதுவிலக்கு சாத்தியமில்லை; 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு போய்விடும்' என்றார்.

2024ல் பேசிய போது, 'நாங்கள் ஜெயித்து விட்டால் மதுவிலக்கு வரும்; கடைகளை மூடி விடுவோம்' என்று கூறினார்.

இப்படி மாற்றி மாற்றிப் பேசுவதில் அண்ணாமலைக்கு நிகர் அவரே. எல்லா விஷயங்களிலும் இப்படித்தான் பேசி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement