யார் ஆட்சியாக இருந்தாலும் போராடுவோம்: சண்முகம்

13

பெரம்பலுார்: பெரம்பலூரில் மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் சண்முகம் அளித்த பேட்டி:



முதலில் பா.ஜ., ஆளும் மாநிலங்களுக்கு அண்ணாமலை செல்ல வேண்டும். அங்கு முழுதுமாக போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும். பின், தமிழகம் வந்து, போதையில்லா தமிழகம் வேண்டும் என போராட்டம் நடத்தட்டும். பா.ஜ., ஆளும் மாநிலங்களில் மது வியாபாரம் செய்வார்களாம்;


ஆனால், தமிழகத்தில் மட்டும் அதை எதிர்ப்பார்களாம். யார் காதில் பூ சுற்ற இதெல்லாம் பேசுகிறார் அண்ணாமலை. அண்ணாமலை நடத்தும் போராட்டம் அனைத்துமே நாடகமாக உள்ளது. அதனால்தான் அவருடைய பேச்சையும் செயலையும் மக்கள்கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை.


அரசு கலைக் கல்லுாரிகளில் பணியாற்றும் கவுரவ பேராசிரியர்களை நிரந்த பணியாளராக்க வேண்டும். ஐகோர்ட் உத்தரவுபடி, ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இதை சட்டசபையில் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கையாக எழுப்புவர்.


மக்களை பாதிக்கிற எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி போராட்டத்தை முன்னெடுக்கத்தான் செய்யும். யார் ஆட்சி என பார்க்க மாட்டோம். நடிகர் விஜய் கட்சி துவங்கியதுமே, முதல்வர் ஆக ஆசைப்படுகிறார். அது தமிழகத்தில் சாத்தியமில்லை.


வரும் சட்டசபைத் தேர்தலில், மா.கம்யூ., கட்சி கூடுதல் எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிடும். அதை நோக்கியே எங்கள் செயல்பாடுகள் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement