நாட்டின் எதிர்காலம் என்ன ஆகும்: ராகுலுக்கு வந்தது கவலை

புதுடில்லி: கல்வியை ஆர்.எஸ்.எஸ்., கட்டுப்பாட்டில் எடுத்தால் இந்தியாவின் எதிர்காலம் அழிந்துவிடும் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.
டில்லியில் ஜந்தர் மந்தரில் தேசிய கல்விக்கொள்கைக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ராகுல் பேசியதாவது:
இந்தியப் பல்கலைகளின் துணைவேந்தர்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ்., ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதை மாணவர் அமைப்புகள் மாணவர்களுக்குச் சொல்ல வேண்டும்.
வரும் காலத்தில், மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆர்.எஸ்.எஸ். பரிந்துரையின் பேரில் நியமிக்கப்படுவார்கள். இதை நாம் நிறுத்த வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ்., கையில் கொஞ்சம் கொஞ்சமாக கல்வி முறை செல்கிறது. அப்படி சென்றால் யாருக்கும் வேலை கிடைக்காது.
வேலையின்மை, பணவீக்கம் மற்றும் கல்வி முறை பற்றி பிரதமர் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. அனைத்து வளங்களையும் அதானி மற்றும் அம்பானியிடம் ஒப்படைத்து, நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ்.யிடம் ஒப்படைப்பது தான் அவர்கள் மாடல்.
நமது சித்தாந்தங்கள் மற்றும் கொள்கைகளில் சில வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் நாட்டின் கல்வி முறையில் நாம் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது. இந்தப் போராட்டத்தை நாம் ஒன்றாகப் போராடி ஆர்.எஸ்.எஸ்.-ஐ பின்னுக்குத் தள்ளுவோம்.
இவ்வாறு ராகுல் பேசினார்.
மேலும் பேசுகையில், கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி பார்லிமென்டில் மகா கும்பமேளா குறித்துக் கருத்து தெரிவித்ததை நினைவு கூர்ந்த ராகுல், பிரதமர் வேலையின்மை மற்றும் பணவீக்கம் குறித்தும் பேசியிருக்க வேண்டும் என்றார்.










மேலும்
-
மாஜி எம்.எல்.ஏ., கருப்பசாமி பாண்டியன் மறைவு: இ.பி.எஸ். இரங்கல்
-
உ.பி.,யில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்: சொல்கிறார் யோகி ஆதித்யநாத்
-
லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை என ராகுல் புகார்: விதிப்படி நடக்க சபாநாயகர் அறிவுரை
-
ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்
-
2027க்குள் ஜி.டி.பி.,யில் ஜெர்மனியை இந்தியா முந்திவிடும்; ஐ.எம்.எப்., கணிப்பு
-
மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி