ராகுல் குடியுரிமை வழக்கு : மத்திய உள்துறைக்கு 4 வார கால அவகாசம்

புதுடில்லி: காங்., எம்.பி.ராகுல் மீதான இரட்டை குடியுரிமை வழக்கில் உள்துறை அமைச்சகம் 4 வாரங்களுக்கு முடிவு எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் அலகாபாத் ஐகோர்ட் லக்னோ கிளை உத்தரவிட்டுள்ளது.
லோக்சபா எதிர்கட்சி தலைவரும் காங்கிரஸ் எம்.பி., ராகுலின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரி ஏற்கனவே பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி 2019-ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில், மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து தெளிவுப்படுத்துமாறு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இதே போன்று கர்நாடகா பா.ஜ.,வைச் சேர்ந்த பிரமுகர் உபி. மாநில அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளையில் தாக்கல் செய்த மனுவில், காங்., எம்.பி., ராகுல், இந்திய குடியுரிமை மற்றும் பிரிட்டன் குடியுரிமை என சட்டவிரோதமாக இரட்டை குடியுரிமைவைத்துள்ளார். இந்திய குடியுரிமை சட்டத்தின்படி, அவர் இந்திய குடிமகன் என்ற தகுதியை இழந்துவிட்டார். விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் விசாரித்து ராகுலின் குடியுரிமையை ரத்து செய்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேணடும் இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பதில் மனுவில் எட்டு வார கால அவசியம் கோரியது.. இதனை ஏற்க மறுத்த நீதிபதி முடிவு எடுத்து 4 வார கால அவகாசம் அளித்து வழக்கின் விசாரணையை ஏப்.21-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.










மேலும்
-
மாஜி எம்.எல்.ஏ., கருப்பசாமி பாண்டியன் மறைவு: இ.பி.எஸ். இரங்கல்
-
உ.பி.,யில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்: சொல்கிறார் யோகி ஆதித்யநாத்
-
லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை என ராகுல் புகார்: விதிப்படி நடக்க சபாநாயகர் அறிவுரை
-
ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்
-
2027க்குள் ஜி.டி.பி.,யில் ஜெர்மனியை இந்தியா முந்திவிடும்; ஐ.எம்.எப்., கணிப்பு
-
மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி