தலைமையாசிரியர் தாராளம்: விமானத்தில் பறந்த மாணவர்கள்

துாத்துக்குடி: துாத்துக்குடியை சேர்ந்த பள்ளி தலைமையாசிரியர் தன் சொந்த செலவில், 17 மாணவ - மாணவியரை விமானத்தில் அழைத்துச் சென்றார்.
துாத்துக்குடி அருகே புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் நெல்சன் பொன்ராஜ், 56; பண்டாரம்பட்டி அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர். வகுப்பில் பாடம் நடத்திய போது, விமானம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போது, மாணவ - மாணவியர் சிலர், 'விமானத்தில் பயணம் செய்ய எங்களாலும் முடியுமா?' என, கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதனால், தன் சொந்த செலவில், ஐந்தாம் வகுப்பு மாணவர் ஐந்து பேர், மாணவியர் ஐந்து பேர், முன்னாள் மாணவர்கள் ஏழு பேர், பெற்றோர் இருவர் என மொத்தம், 19 பேரை, நெல்சன் பொன்ராஜ், நேற்று துாத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார்.
நெல்சன் பொன்ராஜ் கூறியதாவது: எங்களால் ரயில், விமானத்தில் செல்ல முடியுமா என, மாணவர்கள் கேள்வி எழுப்பினர். வறுமையைக் காரணம் காட்டி அவர்கள் கேட்டது எனக்கு மிகவும் வலித்தது. அதனால் தான் இந்த பயணம். விமானத்தில் சென்னை சென்று, மெட்ரோ ரயிலில் பயணித்தோம். வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு சென்றோம்.
எனக்கு, 1 லட்சத்து, 5,000 ரூபாய் செலவானது. என் சொந்த பணத்தில் இந்த பயணத்தை ஏற்பாடு செய்ததில் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.












மேலும்
-
இப்தார் நோன்பில் கூச்சமே இல்லாமல் பங்கேற்கும் இ.பி.எஸ்; முதல்வர் ஸ்டாலின் காட்டம்
-
நாட்டின் எதிர்காலம் என்ன ஆகும்: ராகுலுக்கு வந்தது கவலை
-
எல்லாம் தோனிக்காக..
-
ராகுல் குடியுரிமை வழக்கு : மத்திய உள்துறைக்கு 4 வார கால அவகாசம்
-
சபாநாயகரின் கருத்து உண்மைக்கு புறம்பானது: சொல்கிறார் மார்க்சிஸ்ட் சண்முகம்
-
மீண்டும் மோதுவதற்கு காத்திருக்கிறேன்: ராஜிவ் சந்திரசேகருக்கு சசி தரூர் வாழ்த்து!