வொக்கேஷனல் எக்ஸலன்ஸ் அவார்டு

மதுரை : மதுரை வைகை மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ராஜனுக்கு வொகேஷனல் எக்ஸலன்ஸ் அவார்ட் வழங்கப்பட்டது.

மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சார்பில், 'உலக தண்ணீர் தின சிறப்பு நிகழ்ச்சியில் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க தலைவர் நெல்லை பாலு தலைமை தாங்கினார். செயலாளர் கதிரவன்,.பொருளாளர் சண்முகம் முன்னிலை வகித்தனர்.

மதுரை 'வைகை நதி மக்கள் இயக்க' ஒருங்கிணைப்பாளர் ராஜன் சேவையை பாராட்டி வொகேஷனல் எக்ஸலனஸ் அவார்டு பட்டயமும் கேடயமும் வழங்கப்பட்டது. இதனை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத் தலைவர் நெல்லை பாலு வழங்கினார். 'எது தொண்டு' என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் சண்முக திருக்குமரன் பேசினார். அவரை ஆதவன் அறிமுகம் செய்தார்.

Advertisement