அன்னவாசல் ஜல்லிக்கட்டில் சோகம்; போட்டியை காண வந்தவர் காளை முட்டி பலி

புதுக்கோட்டை; அன்னவாசல் ஜல்லிக்கட்டில் போட்டியை காண வந்தவர் மாடு முட்டி உயிரிழந்தார்.



புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் இன்று (மார்ச் 23) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்றன.


மொத்தம் 300 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இந் நிலையில் போட்டியின் போது மாரிமுத்து என்பவர் காளை முட்டியதில் படுகாயம் அடைந்தார்.


அவரை உடனடியாக அங்குள்ளவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். ஜல்லிக்கட்டில் வேடிக்கை பார்த்தவர் காளை முட்டியதில் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement