தொடரை வென்றது நியூசிலாந்து: பாகிஸ்தான் அணி ஏமாற்றம்

மவுன்ட் மவுங்கானுய்: நான்காவது 'டி-20' போட்டியில் அசத்திய நியூசிலாந்து அணி 115 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியின் முடிவில் நியூசிலாந்து 2-1 என முன்னிலையில் இருந்தது. மவுன்ட் மவுங்கானுய் நகரில் 4வது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி 'பவுலிங்' தேர்வு செய்தது.

நியூசிலாந்து அணிக்கு டிம் சீபெர்ட் (44), ஆலன் (50) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. மார்க் சாப்மேன் (24), டேரில் மிட்செல் (29) ஓரளவு கைகொடுத்தனர். அபாரமாக ஆடிய கேப்டன் பிரேஸ்வெல் (46*) நம்பிக்கை தந்தார். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 220 ரன் எடுத்தது.
கடின இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு முகமது ஹாரிஸ் (2), ஹசன் நவாஸ் (1), கேப்டன் சல்மான் ஆகா (1) ஏமாற்றினர். இர்பான் கான் (24), அப்துல் சமத் (44) ஆறுதல் தந்தனர். மற்றவர்கள் ஏமாற்ற, பாகிஸ்தான் அணி 16.2 ஓவரில் 105 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்ததது. நியூசிலாந்து சார்பில் ஜேக்கப் டபி 4 விக்கெட் சாய்த்தார்.

Advertisement