பேச்சு, பேட்டி, அறிக்கை

புதிய தமிழகம் கட்சி நிறுவனர், டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை:
நெல்லை
டவுனில், முன்னாள், எஸ்.ஐ., ஜாகீர் உசேன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியல் வகுப்பில் இருந்து மதம் மாறிய
பின்னணியை கொண்டவர்கள் என்பதால், பாரபட்சம் காட்டி போலீசார் சுட்டு
பிடிக்கின்றனர். இது என்ன நியாயம்... கொலையை தடுப்பதற்கு எவ்வளவோ
வாய்ப்புகள் இருந்தும் தடுக்க தவறிவிட்டு, தற்போது, 'குற்றவாளிகளை தப்பிக்க
விடமாட்டோம்' என, வெற்று வீராப்பு அறிக்கை விடுவதால் என்ன பயன்?
தமிழகத்தின்
பல பகுதிகளிலும் குற்றவாளிகளை போலீசார் சுட்டு பிடிச்சிருக்காங்களே...
அப்ப எல்லாம், டாக்டர் அமைதியா இருந்துட்டு, இப்ப மட்டும் பொங்குவது ஏன்?
தமிழக, பா.ஜ., விவசாய அணி தலைவர், ஜி.கே.நாகராஜ் அறிக்கை:
'தெரு நாய்களால் கடித்து குதறப்பட்ட ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என, விவசாயிகளோடு, கடந்த மாதம் சாலை மறியல் போராட்டத்தை, பா.ஜ., நடத்தியது. 'பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு பெற்றுத் தரப்படும்' என, அமைச்சர் முத்துசாமி உறுதியளித்தார். அதன்படி, தெரு நாய்களால் கடிபட்டு இறந்த ஆடு, கோழிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் முத்துசாமிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் விவசாயிகள் சார்பில், பா.ஜ., நன்றி தெரிவிக்கிறது.
எதிர்க்கட்சி என்றாலே எல்லாத்தையும் எதிர்க்காம, நல்ல விஷயங்களை பாராட்டணும் என்பதை, பா.ஜ.,விடம் இருந்து மற்ற கட்சிகள் கத்துக்கணும்!
அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர், டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை:
புதிதாக மருத்துவ கல்லுாரிகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை துவக்குவதில் முனைப்பு காட்டும் தமிழக அரசு, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர் பணியிடங்களை உருவாக்கவில்லை. அப்படியிருக்க, மக்களுக்கு சிரமமின்றி மருத்துவ சேவையை எப்படி கொண்டு செல்ல முடியும்?
புதிய மருத்துவ கல்லுாரிகளுக்கு இப்ப தானே அனுமதி கேட்டிருக்காங்க... அது கிடைக்கிறப்ப பார்த்துக்கலாம்னு, 'அசால்டா' இருக்காங்களோ?
தமிழக, காங்., சிறுபான்மையினர் அணி தலைவர் முகமது ஆரிப் பேட்டி:
மத்திய அரசால் முன்மொழியப்பட்ட வக்பு சட்ட திருத்த மசோதா - 2024ஐ எதிர்த்து, கேரளா மற்றும் கர்நாடகா அரசுகளை போல, தமிழக சட்டசபையிலும் தனி தீர்மானத்தை இந்த கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும்.
கண்டிப்பா நிறைவேற்றுவாங்க... மத்திய அரசுக்கு எதிரான தீர்மானம் என்றால், மாநில, தி.மு.க., அரசுக்கு, 'அல்வா' சாப்பிடுவது போலாச்சே!
மேலும்
-
சிறுபான்மை, பெரும்பான்மை என பிரித்தாளும் தி.மு.க.,வின் அரசியல்; வானதி குற்றச்சாட்டு
-
இ.பி.எஸ்.,க்கு வஞ்சப்புகழ்ச்சியில் நன்றி கூறிய முதல்வர்!
-
புலி தாக்கி வாலிபர் பலி: ஊட்டி அருகே மக்கள் அதிர்ச்சி
-
பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை; இ.பி.எஸ்.,
-
முதல்வர் ஸ்டாலினின் கபடநாடகம்; அண்ணாமலை காட்டம்
-
வக்பு சட்டத்திருத்த மசோதாவை கைவிடணும்: தமிழக சட்டசபையில் தீர்மானம் தாக்கல் செய்தார் முதல்வர்