அனுமந்தபுரம் சாலையில் பேனர்கள் வாகன ஓட்டிகள் பீதியில் பயணம்

சிங்கபெருமாள் கோவில்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள்கோவில் ஊராட்சியில் சிங்கபெருமாள்கோவில், திருத்தேரி, பாரேரி, விஞ்சியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

இங்கு 20,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வணிக கட்டடங்கள் உள்ளன.

சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்களின் அடிப்படை தேவைகளுக்காக தினமும், இங்கு வந்து செல்கின்றனர்.

இங்கு ஜி.எஸ்.டி.‍, சாலை, அனுமந்தபுரம் சாலையில் உள்ளிட்ட பகுதிகளில், சாலை ஓரம் விளம்பர பேனர்கள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக அனுமந்தபுரம் சாலையில், காமராஜர் சிலையைச் சுற்றி முகம் சுளிக்கும் வகையில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த சாலை வழியாக பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு, பக்தர்கள் சென்று வருகின்றனர்.

மேலும், நெடுஞ்சாலை ஒட்டியுள்ள இந்த விளம்பரங்கள், வாகன ஓட்டிகள் கவனத்தை திசை திருப்பும் என்பதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

எனவே, இந்த விளம்பர பலகைகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement