மீனவர்களை எச்சரித்து விடுவித்த இலங்கை கடற்படை
ராமேஸ்வரம் : நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை வீரர்கள் சிறைப்பிடித்து 30 நிமிடங்களுக்கு பின் விடுவித்தனர்.
மார்ச் 22ல் ராமேஸ்வரத்தில் இருந்து 420 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வழக்கம் போல் இந்திய, இலங்கை எல்லை பகுதியில் மீன்பிடித்தனர். அங்கு இரண்டு கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். பீதியடைந்த மீனவர்கள் கடலில் வீசிய வலைகளை வேகமாக படகில் இழுத்து வைத்துக்கொண்டு படகுகளுடன் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
அப்போது ஒரு விசைப்படகை இலங்கை கடற்படை வீரர்கள் மடக்கி பிடித்தனர். படகில் இருந்த 7 மீனவர்களிடம் அவர்கள் விசாரித்தனர். அவர்களிடம் மீனவர்கள்,'இனிமேல்தான் மீன்பிடிக்க போகிறோம். தற்போது படகில் மீன்கள் இல்லை,' என்றனர். இதனையடுத்து மீனவர்களை ராமேஸ்வரம் திரும்பி செல்லும்படி இலங்கை கடற்படை வீரர்கள் எச்சரித்து அனுப்பினர். இதையடுத்து மீனவர்கள், இந்திய எல்லைக்குள் மீன்பிடித்து விட்டு நேற்று காலை ராமேஸ்வரம் கரை திரும்பினார்கள். இதுகுறித்து மீன்வளத்துறையினரிடம் மீனவர்கள் புகார் தெரிவிக்கவில்லை.
மேலும்
-
டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் இ.பி.எஸ்., சந்திப்பு
-
பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் காலமானார்
-
சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது: அண்ணாமலை கேள்வி
-
புறநகருக்கு மாறும் திஹார் ஜெயில்: டில்லி பட்ஜெட்டில் அறிவிப்பு
-
பிரிமியர் லீக்: டாஸ் வென்ற குஜராத் அணி 'பீல்டிங்'
-
சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: பின்னணியில் செல்வப்பெருந்தகை