யதோக்தகாரி பெருமாள் ஹம்ஸ வாகனத்தில் உலா

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில், பெருமாளின், மங்களாசாசனம் பெற்ற, 108 திவ்யதேசங்களில், 52வது திவ்யதேசமாக விளங்கி வருகிறது. சொன்னவண்ணம் செய்த பெருமாள் என அழைக்கப்படும், இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், 10 நாட்கள் பிரம்மோத்சவம் விமரிசையாக நடைபெறும். அதன்படி நடப்பாண்டு பங்குனி பிரம்மோத்சவம், நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும், எழுந்தருளிய யதோக்தகாரி பெருமாள் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். இரண்டாம் நாள் உத்சவமான நேற்று காலை ஹம்ஸ வாகனத்திலும், இரவு சூரிய பிரபையிலும் உலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமியை வழிபட்டனர்.
மூன்றாம் நாள் உத்சவமான இன்று காலை 7:00 மணிக்கு கருடசேவை உத்சவமும், இரவு ஹனுமந்த வாகன உத்சவமும், நான்காம் நாள் உத்சவமான நாளை காலை சேஷ வாகன உத்சவமும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும் யதோக்தகாரி பெருமாள் வீதியுலா வருகிறார்.ஏழாம் நாள் பிரபல உத்சவமான தேரோட்டம் வரும் 28 ம் தேதி காலை 7:00 மணிக்கு நடைபெறுகிறது. 30ம் தேதி தீர்த்தவாரியும், மார்ச் 31ம் தேதி வெட்டிவேர் சப்பரத்துடன், 10 நாள் பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.
மேலும்
-
டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் இ.பி.எஸ்., சந்திப்பு
-
பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் காலமானார்
-
சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது: அண்ணாமலை கேள்வி
-
புறநகருக்கு மாறும் திஹார் ஜெயில்: டில்லி பட்ஜெட்டில் அறிவிப்பு
-
பிரிமியர் லீக்: டாஸ் வென்ற குஜராத் அணி 'பீல்டிங்'
-
சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: பின்னணியில் செல்வப்பெருந்தகை