அனுமதியின்றி அம்பேத்கர் சிலை வைத்தவர்களிடம் விசாரணை

உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, கட்டியாம்பந்தல் கிராமத்தில் உள்ள ஊராட்சி அலுவலகம் அருகே, அரசுக்கு சொந்தமான இடத்தில், நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அனுமதியின்றி அம்பேத்கர் முழு உருவச் சிலையை வைத்துள்ளனர்.

தகவலறிந்த உத்திரமேரூர் வருவாய் துறையினர், நேற்று காலை, சம்பவ இடத்திற்கு சென்று, சிலை வைத்தவர்களை அழைத்து விசாரணை நடத்தினர். பின், அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலையை அகற்ற, வருவாய் துறையினர் உத்தரவிட்டனர்.

இதற்கு அப்பகுதியை சேர்ந்தோர் சிலையை அகற்றி விடுவதாக தெரிவித்தனர். இதையடுத்து, வருவாய் துறையினர் துணியால் சிலையை மூடினர்.

அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, இரண்டு ஆண்டுக்கு முன், இதே பகுதியில் அம்பேத்கர் சிலை வைக்க அப்பகுதியினர் முயன்றபோது, வருவாய் துறையினர் தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement