பள்ளி மாணவர்களுக்கு நுாலகம் சார்ந்த போட்டி

திருப்போரூர்:திருப்போரூரில் டாக்டர் அப்துல் கலாம் நடமாடும் நுாலகம் சார்பில், நுாலகம் புத்தகம் படிப்பு சார்ந்த போட்டிகள், நடத்தப்பட்டன.

இதில், திருப்போரூர் வட்டத்தைச் சார்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள 150 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

இதில் பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு ஊக்க பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement