போதை ஹெச்.எம்., சஸ்பெண்ட்

புதுக்கோட்டை : பள்ளியில் மது அருந்திவிட்டு போதையில் உறங்கிய தலைமையாசிரியரை, 'சஸ்பெண்ட்' செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வைரம்பட்டியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக அந்தோணி, 55, பணிபுரிந்து வந்தார். இவர் பள்ளியில் தன் அறையில் மது அருந்திவிட்டு படுத்து உறங்குவதாக புகார் எழுந்துள்ளது.


இது குறித்து, பெற்றோர் புகாரின்படி, சம்பந்தப்பட்ட பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் நேற்று முன்தினம் ஆய்வு நடத்தினார். இதையடுத்து, தலைமையாசிரியர் அந்தோணியை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் செந்தில் நேற்று உத்தரவிட்டார்.

Advertisement