கேளம்பாக்கத்தில் இலவச மருத்துவ முகாம்

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் ஊராட்சி சமுதாய நலக்கூடத்தில், தி.மு.க., திருப்போரூர் வடக்கு ஒன்றியம் மற்றும் படூர் தனியார் மருத்துவமனை நிர்வாகம் சார்பில், இலவச பொது மருத்துவ முகாம் நேற்று நடந்தது.

திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் முகாமை துவக்கி வைத்தார்.

மருத்துவ குழுவினர் பங்கேற்று, பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர்.

இதில், நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்று பயனடைந்தனர். கேளம்பாக்கம் ஊராட்சி தலைவர் ராணி மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அதேபோல், கேளம்பாக்கம் ஊராட்சி முதலாவது வார்டு ரெயின்போ காலனியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் வாயிலாக மட்கும் குப்பை, மட்காத குப்பை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தி, உறுதி எடுக்கப்பட்டது.

Advertisement