தலைகுப்புற கவிழ்ந்த வேன்

உளுந்துார்பேட்டை: டயர் வெடித்து, தலைக்குப்புற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 10 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்தவர் கிஷோர், 47; டிரைவர். இவர், நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த 18 பேரை, 'மஹிந்திரா' வேனில் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக காஞ்சிபுரம் அழைத்துச் சென்றார்.
பகல், 11:20 மணியளவில், உளுந்துார்பேட்டை அடுத்த சிறுத்தனுார் தேசிய நெடுஞ்சாலையில் மடப்பட்டு அருகே சென்றபோது, வேன் டயர் வெடித்தது. இதனால், மீடியனில் வேன் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. விபத்தில், வேனில் இருந்த குணமல்லி, 42, கோபிநாத், 40, காந்தலட்சுமி, 36; கோகிலா, 36; உட்பட 10 பேர் காயமடைந்தனர்.
அவர்களை, அங்கிருந்தவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருநாவலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் இ.பி.எஸ்., சந்திப்பு
-
பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் காலமானார்
-
சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது: அண்ணாமலை கேள்வி
-
புறநகருக்கு மாறும் திஹார் ஜெயில்: டில்லி பட்ஜெட்டில் அறிவிப்பு
-
பிரிமியர் லீக்: டாஸ் வென்ற குஜராத் அணி 'பீல்டிங்'
-
சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: பின்னணியில் செல்வப்பெருந்தகை
Advertisement
Advertisement