ரூ.1.30 கோடி மோசடி; நகை மதிப்பீட்டாளர் கைது

திருப்பத்துார் : திருப்பத்துார் அருகே தான் பணிபுரியும் வங்கியில், போலி நகைகளை அடகு வைத்து, 1.30 கோடி ரூபாயை மோசடி செய்த நகை மதிப்பீட்டாளரை, போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்துார் மாவட்டம், கருப்பனுாரைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 42; திருப்பத்துார் காந்திபேட்டை இந்தியன் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்தார்.

கடந்த 2011 முதல், 2025 மார்ச் 10 வரையிலான காலகட்டத்தில், 42 வாடிக்கையாளர்களை இவரே ஏற்பாடு செய்து, அவர்களது வங்கி கணக்கில், 200 சவரன் போலி நகைகளை வங்கியில் அடமானம் வைத்து, 1.30 கோடி ரூபாய் மோசடி செய்தது ஆய்வில் தெரிய வந்தது. வங்கி முதன்மை மேலாளர் ராஜன் புகார்படி, திருப்பத்துார் டவுன் போலீசார், பாஸ்கரனை கைது செய்தனர்.

Advertisement