முன்னாள் எஸ்.ஐ., கொலை; மேலும் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலியில் முன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனால் இவ்வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
திருநெல்வேலியில் முன்னாள் எஸ்.ஐ., ஜாகிர் உசேன் நிலம் தொடர்பான முன் விரோதத்தில் மார்ச் 18 ல் ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட கார்த்திக் 32, அக்பர் ஷா 32, ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். முக்கிய குற்றவாளி தவ்ஃபீக் என்ற கிருஷ்ணமூர்த்தி தலைமறைவாக இருந்த நிலையில் போலீசார் அவரை துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர். கொலையாளிகளுக்கு சம்பவத்தன்று ஜாஹிர் உசேன் தொழுகை முடித்து வந்த பாதையை தெரிவித்ததாக 16 வயது பள்ளி மாணவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
நேற்று தவ்ஃபீக்கின் மனைவி நூர்னிஷாவின் தம்பி பீர் முகமது 37, கைது செய்யப்பட்டார். நூர்னிஷா கேரளாவில் பதுங்கியிருக்கலாம் என போலீசார் அங்கு தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும்
-
பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவரம்: டில்லி ஐகோர்ட் நீதிபதியின் மொபைல்போன் பதிவுகளை விசாரிக்க முடிவு
-
டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் இ.பி.எஸ்., சந்திப்பு
-
இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதி மாரடைப்பால் காலமானார்
-
சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது: அண்ணாமலை கேள்வி
-
புறநகருக்கு மாறும் திஹார் ஜெயில்: டில்லி பட்ஜெட்டில் அறிவிப்பு
-
ஸ்ரேயாஸ், ஷஷாங்க் அதிரடி: பஞ்சாப் அணி 243 ரன்கள் குவிப்பு