பனையூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளை சதி; 5 பேர் சிக்கினர்

சிவகங்கை : சிவகங்கை அருகே பனையூர் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை அருகே சித்தலுார் விலக்கு வேதமுடைய அய்யனார் கோயில் நாடகமேடை அருகே ஒரு கும்பல் சந்கேத்திற்கு இடமளிப்பதாக கூடியிருந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி, எஸ்.ஐ., பிரேம்குமார் மற்றும் போலீசார் விரைந்து ஆயுதங்களுடன் இருந்த ஐந்து பேரை கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் பனையூர் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

திருப்புவனம் அருகே மேலராங்கியம் வேல்முருகன் 35, பெரியகோட்டை ராமையாராஜன் 37, சிவகங்கை ராஜேந்திரபிரசாத் தெரு பாண்டி 36, நாடிமுத்து 41, நேருபஜார் கருப்புச்சாமி 42, ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து வாள், அரிவாள், முகமூடி, கையுறை உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Advertisement