எல்லை நிலவரம்: இந்தியா - சீனா அதிகாரிகள் பேச்சில் முடிவெடுக்கப்பட்டது என்ன

1

பெய்ஜங்: இந்தியா - சீனா எல்லையில் நிலவும் சூழ்நிலை தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகள் பீஜிங்கில் ஆலோசனை நடத்தினர்.


பெய்ஜிங்கில் நடந்த இந்தக் கூட்டத்தில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சகத்தில் கிழக்கு ஆசியாவிற்கான இணைச் செயலர் கவுரங்கலால் தாஸ் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். சீன தரப்பில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஹோங் லியாங் தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்தில், இரு நாட்டு எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் இரு நாடுகளுக்கு இடையிலான நதி விவகாரம் மற்றும் கைலாஷ் - மானசரோவர் யாத்திரை உள்ளிட்ட இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றங்களை விரைவில் துவக்குவது எனவும் முடிவு செய்தனர்.


எல்லை பிரச்னை தொடர்பாக இந்தாண்டு டில்லியில் நடக்கும் இரு நாடுகளுக்கு இடையிலான சிறப்பு பிரதிநிதிகள் கூட்டத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வது எனவும் இரு நாட்டு அதிகாரிகளும் முடிவெடுத்து உள்ளனர்.

Advertisement