ஸ்குவாஷ்: காலிறுதியில் அனாஹத்

மும்பை: இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் காலிறுதிக்கு இந்தியாவின் அனாஹத் சிங், அபே சிங் முன்னேறினர்.
இந்தியாவில் ஏழு ஆண்டுக்குப் பின், சர்வதேச 'இந்தியன் ஓபன் ஸ்குவாஷ்' மும்பையில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இத்தொடரின் 'நம்பர்-3' வீராங்கனை இந்தியாவின் அனாஹத் சிங், ஸ்பெயினின் கிறிஸ்டினா கோமசை சந்தித்தார். இதில் அனாஹத் சிங் 3-1 (11-5, 9-11, 11-5, 11-2) என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, 3-0 என (11-1, 11-7, 11-8) போர்ச்சுகலில் சோபியாவை வீழ்த்தி, காலிறுதிக்குள் நுழைந்தார். இத்தொடரின் 'நம்பர்-1' சக வீராங்கனை ஆகான்ஷா, 3-1 என (6-11, 11-8, 11-7, 11-4) சக வீராங்கனை தான்வியை சாய்த்தார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் அபே சிங், 3-0 என (11-5, 11-8, 11-7) பிரான்சின் மெல்வினை சாய்த்தார்.
மேலும்
-
ரயிலில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்; திண்டுக்கல் இளைஞர் கைது
-
குடியுரிமை சான்றிதழ் கட்டாயம்; தேர்தலில் பெரிய மாற்றத்தை அறிவித்தார் டிரம்ப்!
-
வீடு ஒதுக்காமல் இழுத்தடிப்பதால் ஆவேசம்; பொதுமக்கள் கோபம்; தி.மு.க., வார்டு செயலாளர் ஓட்டம்
-
ரூ.35 ஆயிரம் லஞ்சம்: வனத்துறை அலுவலர்கள் இருவர் கைது
-
கர்நாடகாவில் இருந்து 7,525 லிட்டர் எரிசாராயம் கடத்தல்: ஓசூரில் லாரியுடன் மடக்கியது போலீஸ்
-
மாயமான பிளஸ் 1 மாணவர் கிணற்றில் சடலமாக மீட்பு