செஸ்: ஹரிகா 'வெண்கலம்'

நிகோசியா: சைப்ரஸ் செஸ் தொடரில் இந்தியாவின் ஹரிகா வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் பெண்களுக்கான 'கிராண்ட் ப்ரீ' தொடர் நடத்தப்படுகிறது. இதன் 4வது சுற்று சைப்ரசில் நடந்தது. இந்தியாவின் ஹரிகா துரோணவள்ளி, திவ்யா தேஷ்முக் உட்பட 10 பேர் பங்கேற்றனர்.
இதன் 9வது, கடைசி சுற்றில் ஹரிகா, உக்ரைனின் அனா முசிசுக் விளையாடினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹரிகா, போட்டியின் 40 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். இந்தியாவின் திவ்யா, ஜெர்மனியின் எலிசபெத் மோதிய மற்றொரு போட்டியும் 'டிரா' ஆனது.
ஒன்பது சுற்றுகளின் முடிவில் இந்தியாவின் ஹரிகா, 5.0 புள்ளியுடன் மூன்றாவது இடம் பிடித்து, வெண்கல பதக்கம் கைப்பற்றினார். இவருக்கு ரூ. 8 லட்சம் பரிசு கிடைத்தது. முதலிரண்டு இடம் பிடித்த உக்ரைனின் அனா முசிசுக் (6.0 புள்ளி), சீனாவின் ஜினர் ஜு (6.0), தங்கம் (ரூ. 14.4 லட்சம்), வெள்ளி (ரூ. 14.4 லட்சம்) வென்றனர். 4.0 புள்ளி மட்டும் எடுத்த திவ்யா (ரூ. 4.6 லட்சம்), 7வது இடம் பிடித்தார்.
மேலும்
-
தமிழக மீனவர் பிரச்னைக்கு மூலகாரணம்: பார்லியில் அமைச்சர் ஜெய்சங்கர் பதில்
-
செல்வப்பெருந்தகை செய்த பகீர் ஊழல்: சி.பி.ஐ.,யில் சவுக்கு சங்கர் புகார்
-
ஒடிசா சட்டமன்றத்தை முற்றுகையிட முயற்சி: காங்கிரசார் மீது தண்ணீர் பீய்ச்சி தடுத்த போலீசார்
-
விரைவில் புடின் மரணமடைவார்: கணித்து சொல்கிறார் உக்ரைன் அதிபர்
-
அமித் ஷாவுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ்: நிராகரித்தார் ராஜ்ய சபா தலைவர்
-
'தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு': முதல்வர் ஸ்டாலின்