போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளில் கடைகள் நடத்த அனுமதிக்க வேண்டாம் மாநகராட்சிக்கு போக்குவரத்து போலீசார் கடிதம்
அடையாறு:அடையாறு மண்டலத்தில், 168 முதல் 180 வரை, 13 வார்டுகள் உள்ளன. கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, அடையாறு, திருவான்மியூர், தரமணி போன்ற பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
இதனால், குறிப்பிட்ட சாலைகளில் வாகனங்கள் நிறுத்த அனுமதி மறுக்கப்படுகிறது. அதுபோன்ற சாலைகளில், கடைகள் நடத்த அனுமதி வழங்க வேண்டாம் என, போக்குவரத்து காவல் துறை, மாநகராட்சிக்கு கடிதம் எழுதியுள்ளது.
வார்டு சாலை
168 கிண்டி ஒலிம்பியா ஐ.டி., பார்க் முதல் காசி திரையரங்கம் வரை
169 சைதாப்பேட்டை கலைஞர் வளைவு - நந்தனம்; சின்னமலை - ராஜ்பவன் மற்றும் கத்திப்பாரா மேம்பாலம் சுற்றியுள்ள பகுதிகள்
172 ராஜ்பவன் - ஹால்டா சந்திப்பு; கான்கோர்டு சந்திப்பு - குருநானக் கல்லுாரி
173 இந்திரா நகர் - அவென்யூ சாலை; காமராஜர் அவென்யூ, இரண்டாவது தெரு - லாட்டீஸ் மேம்பாலம் மற்றும் சர்தார் பட்டேல் சாலை முழுதும்
174 பி.எஸ்.என்.எல்., - சாஸ்திரி நகர், ஒன்றாவது பிரதான சாலை; பெருமாள் கோவில் - பெசன்ட் நகர், ஒன்றாவது அவென்யூ; சாஸ்திரி நகர் ஒன்றாவது பிரதான சாலை - எம்.ஜி.சாலை; பெசன்ட் நகர் நான்காவது பிரதான சாலை - 32வது குறுக்கு தெரு மற்றும் பெசன்ட் அவென்யூ சாலை முழுதும்
177 விஜயநகர் சந்திப்பு - ஏரிக்கரை சந்திப்பு; விஜய நகர் - எம்.ஆர்.டி.எஸ்., மேம்பாலம்; விஜயநகர் - காந்தி சாலை சந்திப்பு மற்றும் காந்தி சாலை முழுதும்
178 வி.வி., கோவில் சந்திப்பு - அஸ்சன்டஸ் சந்திப்பு; டைடல் பார்க் சந்திப்பு - ஒய்.எம்.சி.ஏ., பள்ளி நுழைவு வாயில் மற்றும் வி.வி., கோவில் தெரு முழுதும்
179 கலாஷேத்ரா சாலை முழுதும்180 திருவான்மியூர் சிக்னல் - அடையாறு பேக்கரி; ஆர்.டி.ஓ., அலுவலக சிக்னல்-ஆர்.டி.ஓ., பேருந்து நிறுத்தம்; திருவான்மியூர் பேருந்து நிலையம் - பாண்டிச்சேரி பேருந்து நிறுத்தம் மற்றும் வடக்கு மாடவீதி வரை
மேலும்
-
பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம்: டில்லி ஐகோர்ட் நீதிபதியின் மொபைல்போன் பதிவுகளை விசாரிக்க முடிவு
-
டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் இ.பி.எஸ்., சந்திப்பு
-
இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதி மாரடைப்பால் காலமானார்
-
சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது: அண்ணாமலை கேள்வி
-
புறநகருக்கு மாறும் திஹார் ஜெயில்: டில்லி பட்ஜெட்டில் அறிவிப்பு
-
ஸ்ரேயாஸ், ஷஷாங்க் அதிரடி: பஞ்சாப் அணி 243 ரன்கள் குவிப்பு