சம்பல் கலவரம்: மசூதி தலைவர் கைது

சம்பல் : உத்தர பிரதேசத்தின் சம்பலில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடந்த வன்முறை தொடர்பான வழக்கில், ஷாஹி ஜமா மசூதி கமிட்டியின் தலைவர் ஸபர் அலியை நேற்று போலீசார் கைது செய்தனர்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சம்பல் மாவட்டத்தில், முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஜமா மசூதி உள்ளது.
ஏற்கனவே ஹிந்து கோவில் இருந்த இடத்தில் இந்த மசூதி கட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்தாண்டு நவ., 24 அன்று, மசூதியில் ஆய்வு நடத்த தொல்லியல் துறையினர் வந்தனர்.
அவர்களை மசூதிக்குள் அனுமதிக்க அப்பகுதியை சேர்ந்தவர்கள் மறுத்தனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
இந்த கலவரம் தொடர்பாக விசாரிக்க, மூன்று பேர் அடங்கிய நீதித்துறை கமிஷனை மாநில அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில், ஷாஹி ஜமா மசூதி கமிட்டியின் தலைவர் ஸபர் அலியை, சிறப்பு விசாரணைக் குழு போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். கடந்தாண்டு நடந்த கலவரம் குறித்து அவரது வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநில அரசால் அமைக்கப்பட்ட நீதித்துறை முன் இன்று ஆஜராகி ஸபர் அலி வாக்குமூலம் அளிக்க இருந்த நிலையில், அதை தடுப்பதற்காகவே அவரை கைது செய்துள்ளதாக அவரது சகோதரர் தாஹிர் அலி குற்றஞ்சாட்டி உள்ளார்.
மேலும்
-
டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் இ.பி.எஸ்., சந்திப்பு
-
இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதி மாரடைப்பால் காலமானார்
-
சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது: அண்ணாமலை கேள்வி
-
புறநகருக்கு மாறும் திஹார் ஜெயில்: டில்லி பட்ஜெட்டில் அறிவிப்பு
-
ஸ்ரேயாஸ், ஷஷாங்க் அதிரடி: பஞ்சாப் அணி 243 ரன்கள் குவிப்பு
-
சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: பின்னணியில் செல்வப்பெருந்தகை