மீனவப் பெண்களுக்கு இலவச லைப் ஜாக்கெட்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கடல்பாசி வளர்க்கும் மீனவப் பெண்களுக்கு அமிர்தா பல்கலை சார்பில் இலவச லைப் ஜாக்கெட் வழங்கினர்.

கடலோரத்தில் கடல் பாசி வளர்க்கும் மீனவப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கேரளாவில் உள்ள அமிர்தா பல்கலை சார்பில் 'நீலம் புதிய இளஞ்சிவப்பு' எனும் திட்டத்தை துவக்கி உள்ளனர். இதில் ராமேஸ்வரம் சம்பை, ஓலைக்குடா, ராமநாதபுரம் அருகே திருப்பாலைக்குடி, தொண்டி, சோழியக்குடி ஆகிய மீனவர் கிராமத்தில் உள்ள பெண்கள் கடலோரத்தில் பாசி வளர்த்து பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்கின்றனர்.

115 மீனவப் பெண்களுக்கு கடலில் பாசி வளர்க்க பாதுகாப்பு உபகரணமான லைப் ஜாக்கெட்டுகள், கடலுக்குள் பாசி வளர்வதை பார்க்க முக கண்ணாடிகள், கயிறுகள் உள்ளிட்ட கடல்சார் உபகரணங்களை அமிர்தா பல்கலை நிர்வாகி ஸ்ரீவித்யா சேஷாத்திரி, ராமேஸ்வரம் அமிர்தா பள்ளி மேலாளர் பிரம்மச்சாரிணி லட்சுமியம்மா, ராமநாதபுரம் மீன்துறை ஆய்வாளர் கார்த்திக்ராஜா வழங்கினர்.

Advertisement