அந்தியூரில் மர்ம விலங்குக்கு 17 ஆடுகள் பலிசென்னிமலை அருகே நாய் கடித்து ௮ ஆடு பலி

அந்தியூரில் மர்ம விலங்குக்கு 17 ஆடுகள் பலிசென்னிமலை அருகே நாய் கடித்து ௮ ஆடு பலி


அந்தியூர்:அந்தியூர் அருகேயுள்ள தாசரியூர் காலனியை சேர்ந்தவர் சண்முகம், 50; சின்னத்தம்பிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, நிலத்தை குத்தகைக்கு எடுத்து, பல ஆண்டுகளாக ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். தினமும் ஆடுகளை மேய்த்து விட்டு, சுற்றிலும் அமைக்கப்பட்ட கம்பி வேலிக்குள் அடைப்பது வழக்கம். தற்போது முப்பது செம்மறி ஆடுகள், பத்து மாடுகளை வளர்த்து வந்தார். இரு நாட்களுக்கு முன் கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்த இரண்டு ஆடுகள் காணாமல் போயின. நேற்று காலை வந்து பார்த்தபோது, 17 ஆடுகள் கடிபட்டு ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தன. அந்தியூர் வருவாய் துறையினர், போலீசார் ஆய்வு நடத்தினர். கம்பி வேலியின் கீழ்பகுதியில் அரை அடிக்கு வழி இருப்பதால், அவ்வழியே சென்ற மர்ம விலங்கு ஆடுகளை கடித்து கொன்றிருக்கலாம் எனத்தெரிகிறது.
நாய்கள் அட்டகாசம்சென்னிமலை யூனியன் பு.பாலதொழுவு ஊராட்சி ராசம்பாளையத்தில், செல்வராஜ் என்பவர் பட்டி அமைத்து, 25க்கும் மேற்பட்ட ஆடு வளத்து வருகிறார். இதில் தெருநாய்கள் புகுந்து கடித்ததில் ஏழு ஆடுகள் இறந்தன. ஏழு ஆடுகள் காயமடைந்தன. அதேபகுதியில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான பட்டியில் புகுந்து நாய்கள் கடித்ததில் ஒரு ஆடு பலியானது.


Advertisement