கனி மார்க்கெட் வாடகை விவகாரம்வியாபாரிகள் மேயரிடம் முறையீடு


கனி மார்க்கெட் வாடகை விவகாரம்வியாபாரிகள் மேயரிடம் முறையீடு


ஈரோடு:ஈரோடு கனி மார்க்கெட் (ஜவுளி) தினசரி வியாபாரிகள் சங்க தலைவர் நுார்சேட், தியாகி குமரன் வியாபாரிகள் சங்க தலைவர் மூர்த்தி தலைமையிலான வியாபாரிகள், மேயர் நாகரத்தினத்திடம் நேற்று மனு அளித்தனர்.
இதுபற்றி அவர்கள் கூறியதாவது: கடந்த, 2024 ஏப்ரலில்தான் கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் வியாபாரத்தை துவக்கினோம். இதில், 106 கடைகள் உள்ளன. மாநகராட்சி சார்பில் வாடகை செலுத்த நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
இதில் கடந்தாண்டு பிப்., முதல் வாடகை செலுத்த கேட்டுள்ளனர். கடந்தாண்டு மார்ச் 15ல் தான் வணிக வளாக கட்டுமான பணி நிறைவு பெற்றன. ஆனால் பிப்., முதல் கடை வாடகை செலுத்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், ௧4 மாதங்கள் கடை வாடகை செலுத்த வேண்டும். இதுபற்றி துணை கமிஷனரிடம் பேசி பலனில்லை. அமைச்சரிடமும் மனு கொடுத்துள்ளோம். இரு மாத வாடகையை கழிக்க வலியுறுத்தி மேயரிடம் மனு கொடுத்துள்ளோம்.
மாமன்ற கூட்டத்தில் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement