அண்ணனுடன் கோவிலுக்கு சென்ற தங்கை பலி அண்ணனுடன் கோவிலுக்கு சென்ற தங்கை பலி


அண்ணனுடன் கோவிலுக்கு சென்ற தங்கை பலி


புன்செய்புளியம்பட்டி:சத்தியமங்கலம், காந்தி நகரை சேர்ந்தவர் சீனிவாசன், 29; பெங்களூரு ஐ.டி., நிறுவன ஊழியர். இவரின் மனைவி ஹரி மயூரா, 27, தாய் கவிதா, 50, தங்கை விவேகா, 26; மூவரையும் அழைத்துக்கொண்டு டாடா ஜெஸ்ட் காரில், கோவை மாவட்டம் சிறுமுகை அருகே ஓதிமலை முருகன் மலைக் கோவிலுக்கு நேற்று சென்றார். காரை சீனிவாசன் ஓட்டினார்.
சத்தி-மேட்டுப்பாளையம் சாலையில், பவானிசாகரை அடுத்த சீரங்கராயன் கரடு அருகே வளைவில், கார் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வனப்பகுதியில் கவிழ்ந்தது. இதில் தலையில் படுகாயம் அடைந்த விவேகா சம்பவ இடத்தில் பலியானார். மற்ற மூவரும் படுகாயம் அடைந்தனர். சத்தி அரசு மருத்துவமனைக்கு மூவரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்தில் பலியான விவேகா, கோவை, சிங்காநல்லுாரில் உள்ள ஈ.எஸ்.ஐ., மருத்துவமனையில் பணியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement