ஏலத்தில் தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் கைகோர்ப்புரத்து செய்யப்பட்டதால் நடந்தது ரகசிய ஆலோசனை


ஏலத்தில் தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் கைகோர்ப்புரத்து செய்யப்பட்டதால் நடந்தது ரகசிய ஆலோசனை


ஈரோடு:ஈரோடு மாநகராட்சி வ.உ.சி. பூங்கா, சிறுவர் பூங்காவுக்கான ஒப்பந்த காலம், ஆறு மாதங்களுக்கு முன் நிறைவடைந்ததும் பூட்டப்பட்டது. மக்கள் எதிர்ப்பால் திறந்தனர்.
சில தினங்களுக்கு முன் மீண்டும் பூட்டினர். விபரம் கேட்டபோது பராமரிப்பு பணி நடப்பதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில், வ.உ.சி., பூங்கா மற்றும் சிறுவர் பூங்காவை பொது ஏலத்தில் விடுவதற்கான பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது.
ஏலத்துக்கான கூட்டம் துவங்கும் முன்பே, அ.தி.மு.க., - தி.மு.க., நிர்வாகிகள் பூங்காக்களை ஏலம் எடுப்பதில் முனைப்பு காட்டினர். இதனால் ஏலத்துக்கான கூட்டத்தில் பிரச்னை ஏற்படும் சூழல் நிலவியது. இந்நிலையில் நிர்வாக காரணங்களால், பொது ஏலம் ஒத்திவைக்கப்படுவதாக கூறி, துணை கமிஷனர் தனலட்சுமி கையெழுத்திட்ட நோட்டீஸ், மாநகராட்சி அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.
இதனால் ஏலம் எடுக்க வந்த அ.தி.மு.க., - தி.மு.க., நிர்வாகிகள், மாநகராட்சிக்கு சொந்தமான அறையில் ஆலோசனை நடத்தினர்.
எலியும், பூனையுமாக உள்ள இரு கட்சி நிர்வாகிகள், பூங்கா ஏலத்தில் கைகோர்த்து களமிறங்கியது, ஆச்சர்யமில்லையா அல்லது காலம், காலமாக இப்படித்தானே நடக்கிறது? என்று சாதாரணமாக எடுத்து கொள்ளலாமா?

Advertisement