நிற்காத பஸ்சை பிடிக்க 300 மீ., ஓடிய மாணவி

திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே நிறுத்தத்தில் பஸ் நிற்காததால், பஸ்சை, 300 மீட்டர் துாரம் விரட்டி சென்று மாணவி பஸ் ஏறினார். இது தொடர்பான வீடியோ பரவிய நிலையில், அலட்சிய பஸ் டிரைவரின் செயலுக்கு கண்டனம் வலுத்ததால் அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
திருப்பத்துாரில் இருந்து வாணியம்பாடி வழியாக ஆலங்காயம் செல்லும் அரசு டவுன் பஸ் நேற்று காலை, 8:30 மணியளவில் சென்றது. பஸ்சுக்காக பிளஸ் ௨ மாணவி மற்றும் பெண் கூலி தொழிலாளி என இருவர், கொத்தக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தனர்.
டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் வேகமாக ஓட்டினார். பள்ளிக்கு செல்ல வேறு பஸ் இல்லாததால், பஸ்சை பின் தொடர்ந்து, ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதுபோல், 300 மீட்டர் துாரம் மாணவி துரத்தி சென்றார்.
அப்போது பஸ்சின் பின்னால் பைக்கில் வந்த பொதுமக்கள் கூச்சலிட்டதால், பஸ் டிரைவர் முனிராஜ் பஸ்சை நிறுத்தி, மாணவியை மட்டும் ஏற்றிக்கொண்டு, பெண் தொழிலாளியை ஏற்றாமல் மின்னல் வேகத்தில் பறந்தார். இந்த வீடியோ இணையத்தில் பரவியது. டிரைவர் முனிராஜ், கண்டக்டர் அசோக்குமார் ஆகியோரை போக்குவரத்து கழக அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
மேலும்
-
லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை என ராகுல் புகார்: விதிப்படி நடக்க சபாநாயகர் அறிவுரை
-
ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்
-
2027க்குள் ஜி.டி.பி.,யில் ஜெர்மனியை இந்தியா முந்திவிடும்; ஐ.எம்.எப்., கணிப்பு
-
மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
-
5 நாட்களில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரும்: வானிலை மையம் லேட்டஸ்ட் தகவல்
-
கூட்டணி கணக்கு குறித்து சட்டசபையில் விவாதம்!