நிர்வாகிகள் பொறுப்பேற்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட சிலம்ப ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நலச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா, நேற்று நடந்தது. நாமக்கல் அழகு நகர் சமுதாய கூட்டத்தில் நடந்த கூட்டத்தில், மாவட்ட தலைவராக ராஜேந்திரகுமார், செயலாளராக மோகன்ராஜ், பொருளாளராக சிவானந்தன் ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் தில்லை சிவக்குமார், சர்வம் அறக்கட்டளை நிர்வாகி ரம்யா ஆகியோர் பங்கேற்று, நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தனர். முன்னாள் நிர்வாகிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து சிலம்ப பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement